3வது நாளாக உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்ட பிறகு, ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்திய சந்தைகள் தற்போது ஏற்றத்தில் காணப்படுகிறது.

மேலும் கடந்த சில அமர்வுகளாக இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், நவம்பர் 2 நிலவரப்படி 244.87 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே நேரம் உள் நாட்டு முதலீட்டாளர்கள் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 493.76 புள்ளிகள் அதிகரித்து, 60,522.82 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 29.70 புள்ளிகள் அதிகரித்து, 17,918.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 286.70 புள்ளிகள் அதிகரித்து, 60,297.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 72.30 புள்ளிகள் அதிகரித்து, 17,961.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,101 பங்குகள் ஏற்றத்திலும், 348 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்தில் சரிவினைக் கண்டு காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகள் ஏற்றம் கண்டிருந்தாலும் 1% கீழாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், யுபிஎல், ஐஓசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, டைட்டன் நிறுவனம், ஹெச்.யு.எல், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி., உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, டைட்டன் நிறுவனம், ஹெச்.யு.எல், ஐடிசி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 270.73 புள்ளிகள் அதிகரித்து, 60,299.79 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 81..35 புள்ளிகள் அதிகரித்து, 17,970.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் இன்று ரியால்டி பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+