மீண்டும் பங்கு சந்தைகள் எழுச்சி.. முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் உச்சத்தினை தொட்ட பிறகு, ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்திய சந்தைகள் தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், இன்று மீண்டும் ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தை தற்போது ஏற்றம் கண்டாலும், பிறகு சரிவினைக் காணலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

முதல் நாளே சரிவு தான்.. என்ன காரணம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..! முதல் நாளே சரிவு தான்.. என்ன காரணம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..!

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த அமர்வில் அன்னிய முதலீடுகளானது சந்தையில் இருந்து 2,459.10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2,390.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 313.82 புள்ளிகள் அதிகரித்து, 61,280.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.40 புள்ளிகள் அதிகரித்து, 18,138.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 156.51 புள்ளிகள் அதிகரித்து, 61,123.56 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.40 புள்ளிகள் அதிகரித்து, 18,164.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,049 பங்குகள் ஏற்றத்திலும், 492 பங்குகள் சரிவிலும், 93 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும, மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.யு.எல், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.யு.எல், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 375.73 புள்ளிகள் அதிகரித்து, 61,342.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 115.55 புள்ளிகள் அதிகரித்து, 18,240 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell on October 26th 2021: indices trade up amid positive global cues

Market update.. Sensex trade above 58,500, Nifty trade nearly in 17,400
Story first published: Tuesday, October 26, 2021, 9:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X