மீண்டும் 60,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,900-க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் 60,000 புள்ளிகளை தாண்டி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த அமர்வில் முதலீடுகள் அதிகரித்த நிலையில், சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

இதற்கிடையில் சந்தையினை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை மாற்றம் செய்யாமல், மீண்டும் 4% தொடருவதாக அறிவித்துள்ளது.

Array

Array

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கின. ஆக இதன் எதிரொலியும் இந்திய சந்தையில் காணப்படுகின்றது. இவற்றோடு ரெப்போ விகிதமும் எதிர்பார்த்தை போல மாற்றம் செய்யப்படவில்லை.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 147.22 புள்ளிகள் அதிகரித்து, 59,825.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 144.20 புள்ளிகள் அதிகரித்து, 17,934.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 260.83 புள்ளிகள் அதிகரித்து, 59,938.66 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 85.60 புள்ளிகள் அதிகரித்து, 17,875.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1624 பங்குகள் ஏற்றத்திலும், 368 பங்குகள் சரிவிலும், 82 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி தவிர, மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்றவை 1 கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா. ஹெச்.யுஎல், டிவிஸ் லேப், நெஸ்டில், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், நெஸ்டில், என்.டி.பி,சி, டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது என்ன நிலவரம்

தற்போது என்ன நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 24 பைசா குறைந்து, 75.02 ரூபாயாக காணப்படுகின்றது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 74.78 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 354.01 புள்ளிகள் அதிகரித்து, 60,040.94 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.75 புள்ளிகள் அதிகரித்து, 17,898.10 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+