நடப்பு ஆண்டின் முதல் வர்த்தக நாளே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை கண்டன.
எனினும் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சற்று ஏமாற்றம் தரும் விதமாக சற்று சரிவினைக் கண்டுள்ளது.
கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்று சற்று சரிவில் இருப்பது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக இருந்தாலும், இந்திய முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக்
செய்வதாலும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சந்தை ப்ரீ ஒபனிங்
இதற்கிடையில் இன்று காலையில் சந்தைகள் ப்ரீ ஒபனிங்லேயே சற்று கீழாகத்தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் செக்செக்ஸ் 155.16 புள்ளிகள் சரிந்து, 48,021 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 39.30 புள்ளிகள் சரிந்து 14,093 ஆகவும் இருந்தது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இதனையடுத்து தொடக்கத்திலும் சந்தை சற்று சரிவிலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 183.10 புள்ளிகள் குறைந்து, 47,993.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.90 புள்ளிகள் குறைந்து, 14,076.90 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதற்கிடையில் 581 பங்குகள் ஏற்றத்திலும், 1022 பங்குகள் சரிவிலும், 56 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, எம் & எம், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, எம் & எம், என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் இன்று முடிவில் சென்செக்ஸ் 156.26 புள்ளிகள் குறைந்து, 48,030.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.45 புள்ளிகள் குறைந்து, 14,082.45 புள்ளிகளாகவும் உள்ளது. இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 73.13 ரூபாயாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications