கடந்த சில தினங்களாக சந்தையானது சற்று சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சரிவிலேயே தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் வர்த்தகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் இன்றும் உச்சத்தினை தொட்டன. ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது.
இது ப்ராஃபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளை எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள ப்ராஃபிட் செய்யலாம் இதன் காரணமாகவும் சந்தை சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 88.19 புள்ளிகள் அதிகரித்து, 48,435.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 198.60 புள்ளிகள் அதிகரித்து, 14,437.50 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.
எனினும் சந்தையின் தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 280.96 புள்ளிகள் குறைந்து, 48,066 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 81 புள்ளிகள் குறைந்து, 14,157.90 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 526 பங்குகள் ஏற்றத்திலும், 586 பங்குகள் சரிவிலும், இதே 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் நிஃப்டி, அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், விப்ரோ, எம்&எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஐஓசி, ஹெச்யுஎல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, ஐடிசி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்யுஎல், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 72.94 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.95 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாகவும், அதோடு வரவிருக்கும் பட்ஜெட் காரணத்தினாலும் சந்தை, ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 450.06 புள்ளிகள் குறைந்து, 47,897.53 ஆகவும், இதே நிஃப்டி 129.85 புள்ளிகள் குறைந்து, 14,109.05 ஆகவும் காணப்படுகிறது.