இந்திய சந்தையில் தொடரும் ஏற்ற இறக்கம்.. எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி தான் காரணமா?

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் தடுமாற்றத்தில் தான் உள்ளது.

இந்த வாரத்தில் இந்திய சந்தையில் எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி இருக்கும் காரணத்தினால் சந்தைகள் தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது புராபிட் புக்கிங்க், ரோல் ஓவர் உள்ளிட்ட காரணங்களினால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 295.32 புள்ளிகள் அதிகரித்து, 50,932.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.40 புள்ளிகள் அதிகரித்து, 15,238.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 166.86 புள்ளிகள் அதிகரித்து, 50,804.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34 புள்ளிகள் அதிகரித்து, 15,242.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1220 பங்குகள் ஏற்றத்திலும், 291 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட் குறியீடுகள் சிவப்பு நிறத்திலும், மற்றவை சற்று ஏற்றத்திலும் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், கிரசிம், சிப்லா, யுபிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ், சன் பார்மா, லார்சன், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.சி.எல் டெக், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

பல்வேறு சர்வதேச காரணிகளுக்கும் மத்தியில், அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த கவலைகளும், முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதற்கிடையில் எஃப்& ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 117.35 புள்ளிகள் அதிகரித்து, 50,754.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.40 புள்ளிகள் அதிகரித்து, 15,239.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+