வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!

கடந்த வாரத்தில் வர்த்தகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் இன்றும் உச்சத்தினை தொட்டன. அதிலும் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது.

ஆனால் அதன் பிறகு அடுத்த நாளே சரிவினைக் காணத் தொடங்கியது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சந்தை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளே தடுமாறும்  இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!

இது இந்த வாரத்தில் எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் இருக்கலாம். அதோடு முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள புராபிட் செய்யலாம் இதன் காரணமாகவும் சந்தை சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 563.43 புள்ளிகள் அதிகரித்து, 49,441.97 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 186.40 புள்ளிகள் அதிகரித்து, 14,558.30 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.

இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 262.71 புள்ளிகள் அதிகரித்து, 49,141.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 98.10 புள்ளிகள் அதிகரித்து, 14,470 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 1088 பங்குகள் ஏற்றத்திலும், 260 பங்குகள் சரிவிலும், இதே 61 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இதற்கிடையில் நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகளில், பிஎஸ் இ சென்செக்ஸ், நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி தவிர, மற்றவை சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், யுபிஎல், ஹெச்டிஎஃப்சி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், பவர்கிரிட் கார்ப், ஹெச்டிஎஃப்சி லைஃப், நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், பவர்கிரிட் கார்ப், நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஒஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 72.95 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.97 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 113.05 புள்ளிகள் அதிகரித்து, 48,991.59 ஆகவும், இதே நிஃப்டி 36.85 புள்ளிகள் அதிகரித்து, 14,408.75 ஆகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+