தடுமாறும் இந்திய சந்தைகள்.. மீண்டும் சரிவில் சென்செக்ஸ்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் சரிவில் தான் உள்ளது.

இந்த வாரத்தில் சில நாடுகளின் மத்திய வங்கிகள் முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அது எப்படியிருக்கும் என முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 99.71 புள்ளிகள் குறைந்து, 50,264.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 47.20 புள்ளிகள் குறைந்து, 14,863.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 58.75 புள்ளிகள் குறைந்து, 50,305.21 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 24.90 புள்ளிகள் குறைந்து, 14,885.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 694 பங்குகள் ஏற்றத்திலும், 552 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்ப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிபிசிஎல், ஓ என் ஜி சி, கோல் இந்தியா, என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, டெக் மகேந்திரா டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, என்டிபிசி, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.58 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.55 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 73.68 புள்ளிகள் குறைந்து, 50,290.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38.80 புள்ளிகள் குறைந்து, 14,871.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+