1600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டி 15,700-க்கு மேல் வர்த்தகம்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் மீண்டும் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தை எதுவும் கைகொடுக்காத நிலையில், தொடர்ந்து யுத்தமானது நடந்து கொண்டுள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் உச்சம் தொடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

கடந்த அமர்வில் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகளும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

ரஷ்யா - உக்ரைன் பதற்றம், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், தொடர்ந்து பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் மார்ச் 4 நிலவரப்படி, 7631.02 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4738.99 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 369.79 புள்ளிகள் குறைந்து, 53,964.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 208.90 புள்ளிகள் குறைந்து, 16,036.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 1326.62 புள்ளிகள் குறைந்து, 53,007.19 புள்ளிகளாகவும், நிஃப்டி357.40 புள்ளிகள் குறைந்து, 15,888 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 561 பங்குகள் ஏற்றத்திலும், 1588 பங்குகள் சரிவிலும், 121 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ் குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாக சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ கேபிட்டல் குட்ஸ் குறியீடுகள் 3% மேலாகவும், , நிஃப்டி 50,பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸ் இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ் பங்கு டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, இந்தஸ் இந்த் வங்கி, லார்சன், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய  நிலவரம்

தற்போதைய நிலவரம்

10.20 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1696 புள்ளிகள் குறைந்து, 52,637 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 459.95 புள்ளிகள் குறைந்து, 15,785.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+