இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் மீண்டும் சற்று சரிவில் காணப்படுகின்றன.
தொடர்ந்து 8வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கிடையிலும் ரஷ்யா - உக்ரைன் இரண்டாம் கட்டமாக இன்று பேச்சு வார்த்தை நடத்தவுள்ளன.
ஆக இதில் ஆவது சமாதானம் ஏற்படுமா? குண்டு சத்தங்கள் நிறுத்தப்படுமா? போர் பதற்றம் ஓயுமா? என்ற பலமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
8வது நாளாக நீடிக்கும் போர்
எனினும் 8 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில் கூட, நாளுக்கு நாள் ரஷ்யாவின் உக்கிரம் நீடித்து வருகின்றதே தவிர, குறைந்தபாடாக இல்லை. இன்று உக்ரைனின் அணுமின் நிலையத்தில் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளும் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் ரஷ்யா செவி சாய்ப்பதாகவும் இல்லை.
சர்வதேச சந்தைகள்
உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகளும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. மேலும் இன்று கடைசி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங்கும் இருக்கலாம்.
முதலீடுகள் வெளியேற்றம்
ரஷ்யா - உக்ரைன் பதற்றம், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், தொடர்ந்து பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் மார்ச் 3 நிலவரப் படி, 6644.65 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4799.24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 666.69 புள்ளிகள் குறைந்து, 54,435.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 282.10 புள்ளிகள் குறைந்து, 16,215.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 717.39 புள்ளிகள் குறைந்து, 54,385.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 209.40 புள்ளிகள் குறைந்து, 16,288.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 637 பங்குகள் ஏற்றத்திலும், 1151 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப் ஃபண்டுகள், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஹிண்டால்கோ, ஐடிசி, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, ஹீரோ மோட்ய்டோ கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, எம் & எம், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
10.09 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 834.58 புள்ளிகள் குறைந்து, 54,268.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 250.5 புள்ளிகள் குறைந்து, 16,247.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications