நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளை கடந்துள்ளது.
இதே தேசிய பங்கு சந்தையான நிஃப்டியும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றது. மொத்தத்தில் சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டும் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளன.
இது கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் பலத்த ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் பாசிட்டிவ் ஆக காணப்பட்டன. எனினும் எவர்கிராண்டேவின் தாக்கம் என்பது ஆசிய சந்தைகளில் காணப்பட்டது.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
எப்படியிருப்பினும் இந்திய சந்தையானது இரண்டாவது நாளாக இன்று பலமான ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது ரிசர்வ் வங்கி பத்திரம் வாங்குதல் குறித்தான சாதகமான அறிவிப்பினை வெளியிட்ட நிலையில், இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு முதலீடுகள் கடந்த சில தினங்களாகவே வெளியேறிய வண்ணம் இருந்தாலும், தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது அதிகமாகவே காணப்பட்டது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 246.34 புள்ளிகள் அதிகரித்து, 60,131.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 93.70 புள்ளிகள் அதிகரித்து, 17,916.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 325.71 புள்ளிகள் அதிகரித்து, 60,211.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 93.30 புள்ளிகள் அதிகரித்து, 17,916.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1293 பங்குகள் ஏற்றத்திலும், இதே 355 பங்குகள் சரிவிலும், 89 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் குறியீடுகள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஸ்மால்கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி., பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் ஏற்றத்திலும் காணப்படுகின்றன. பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி குறியீடுகள் 2% மேலாக அதிகரித்தும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், கிரசிம், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் தற்போது நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 73.74 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 312.49 புள்ளிகள் அதிகரித்து, 60,197.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 78.25 புள்ளிகள் அதிகரித்து, 17,911.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications