லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 200 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்கள் மற்றும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங்கினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மூன்றாவது அலை குறித்தான பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம், தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க சந்தைகள் மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சாதகமாக தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் தொடக்கத்தில் சாதகமாக தொடங்கியது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 39.71 புள்ளிகள் அதிகரித்து, 54,594.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.10 புள்ளிகள் அதிகரித்து, 16,285.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 141.75 புள்ளிகள் அதிகரித்து, 54,696.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.90 புள்ளிகள் அதிகரித்து, 16,330 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1099 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஸ்ரீ சிமெண்ட்ஸ், சிப்லா, டாடா கன்சியூமஸ் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், ஹெச்.சி.எல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டு, 74.38 ரூபாயாக காணப்படுகிறது. தற்போது சென்செக்ஸ் 260.57 புள்ளிகள் குறைந்து, 54,294.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+