நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
இது பல நாடுகளிலும் புதிய வகை கொரோனாவின் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
எப்படியிருப்பினும் தடுப்பூசி எண்ணிக்கை மற்றும் பல தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், மூன்றாம் கட்ட பரவல் இந்தியாவில் அவ்வளவாக தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்பில்லை. எப்படியிருப்பினும் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி என்பதை கடைபிடித்து, தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறப்பு என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
முக்கிய காரணிகள்
அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தை ஆரம்பத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் பின்னர் சரிவினை நோக்கி திரும்பியுள்ளது. இது அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா தொற்று பரவலால் கலவையால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 75.11 புள்ளிகள் அதிகரித்து, 52,810.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 7.30 புள்ளிகள் அதிகரித்து, 15,822.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 7.06 புள்ளிகள் அதிகரித்து, 52,742.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 6.40 புள்ளிகள் குறைந்து, 15,808.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1234 பங்குகள் ஏற்றத்திலும், 542 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், லார்சன், விப்ரோ, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிரிட்டானியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஐடிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹெச்.சி.எல் டெக், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா குறைந்து, 74.28 ரூபாயாக தொடங்கியுள்ளது.இது முந்தைய அமர்வில் 74.19 ரூபாயாக முடிவடைந்தது.
தற்போது சென்செக்ஸ் 150.72 புள்ளிகள் குறைந்து, 52,584.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 47.6 புள்ளிகள் குறைந்து, 15,768.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications