நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சரிவில் தான் உள்ளது.
குறிப்பாக பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் சிலவும் சற்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலி மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக இந்திய சந்தைகளும் சற்று சரிவில் காணப்படுகின்றன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
எனினும் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 109.19 புள்ளிகள் அதிகரித்து, 49,271 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.90 புள்ளிகள் அதிகரித்து, 14,856.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியது. சென்செக்ஸ் 221.45 புள்ளிகள் குறைந்து, 48,940.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.30 புள்ளிகள் குறைந்து, 14,800.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1135 பங்குகள் ஏற்றத்திலும், 331 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டாடா மோட்டார்ஸ், லார்சன், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், எம்&எம், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, லார்சன், எஸ்பிஐ, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி, எம்&எம், கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா சரிந்து, 73.49 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.34 ரூபாயாகும்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 351.39 புள்ளிகள் குறைந்து, 48,810.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 97 புள்ளிகள் குறைந்து, 14,753.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications