நடப்பு வாரத்தின் நாங்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் சந்தை விடுமுறை ஆதலால், இன்று அதன் தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இது தவிர இறுதி காலாண்டு அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், அதிகரித்து வரும் பரவல் என்பது மேலும் சரிவுக்கு வழிவகுக்குமோ என்ற நிலையும் இருந்து வருகின்றது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 299.03 புள்ளிகள் குறைந்து, 48,245.03 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.60 புள்ளிகள் குறைந்து, 14,472.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 60.55 புள்ளிகள் அதிகரித்து, 48,604.61 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.60 புள்ளிகள் அதிகரித்து, 14,540.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 705 பங்குகள் ஏற்றத்திலும், 706 பங்குகள் சரிவிலும், 81 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஓஎன்ஜிசி, விப்ரோ, டிவிஎஸ் லேப்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிரசிம், இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டிசிஎஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், இந்தஸிந்த் வங்கி, மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதுவும் ஒரு காரணம்?
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஏனெனில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால், மீண்டும் பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்து, 75.19 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 327.54 புள்ளிகள் குறைந்து, 48,216.52 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 81.80 புள்ளிகள் அதிகரித்து, 14423 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இனி வரும் நாட்களில் சர்வதேச காரணிகள் பலவும் நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications