உக்ரைன் - ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் மீண்டும் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

கடந்த வார தொடக்கத்தில் மோசமான வீழ்ச்சியினை கண்ட சந்தையானது, வார இறுதியில் தான் சற்றே ஏற்றம் கண்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பலத்த சரிவில் காணப்படுகின்றது.

இதற்கு ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் என்பது முக்கிய காரணமாக உள்ளது. தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகின்றது.

பேச்சு வார்த்தை கைகொடுக்குமா?

பேச்சு வார்த்தை கைகொடுக்குமா?

தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனை பெலாரஸில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா அழைத்தது. ஆனால் இதற்கு உக்ரைன் முதலில் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் தற்போது இந்த பேச்சு வார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் சமாதானம் அடையுமா? ரஷ்யா? குண்டு சத்தங்கள் நிறுத்தப்படுமா? அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும், பயமும் எதிர்பார்ப்புகளுமே இருந்து வருகின்றது.

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 25 நிலவரப் படி, ரஷ்யா - உக்ரைன் பதற்றம், சர்வதேச அளவிலான வளர்ச்சி பற்றிய கவலை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதில் 4470.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4318.24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தைகளும் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியிலும், இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றன. எனினும் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் 2% மேலாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளன. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலி இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 264.86 புள்ளிகள் குறைந்து, 55,593.66 புள்ளிகளாகவும், நிஃப்டி 150.70 புள்ளிகள் குறைந்து, 16,507.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 732.90 புள்ளிகள் குறைந்து, 55,125.62 புள்ளிகளாகவும், நிஃப்டி 211 புள்ளிகள் குறை ந்து, 16,447.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதில் 626 பங்குகள் ஏற்றத்திலும், 1462 பங்குகள் சரிவிலும், 142 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ அயில் & கேஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 2% வரையில் சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஸ்டீல், பிபிசிஎல், பவர் கிரிட் கார்ப், ஹிண்டால்கோ, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்டி.எஃப்.சி லைஃப், ஈச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், மாருதி சுசுகி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

10.15 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 762.9 புள்ளிகள் குறைந்து, 55,095.9 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 213.35 புள்ளிகள் குறைந்து, 16,445.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+