நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவினைக் கண்டுள்ளன. கடந்த வாரத்தில் தொட்ட புதிய உச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் சரிவினை கண்டு வருகின்றது சென்செக்ஸ்.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சந்தைகள், தொடர்ந்து புதிய உச்சத்தினை உடைத்து அனுதினமும் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன. இதனையடுத்து இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறைந்தே, மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக முதலீடுகள் இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளன. இது இந்திய சந்தைக்கு எதிரான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் சந்தையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில் முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்ய தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 192.12 புள்ளிகள் அதிகரித்து, 60,270 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 135.40 புள்ளிகள் அதிகரித்து, 17,990.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 25.29 புள்ளிகள் அதிகரித்து, 60,103.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17.10 புள்ளிகள் அதிகரித்து, 17,872 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,170 பங்குகள் ஏற்றத்திலும், 461 பங்குகள் சரிவிலும், 103 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிந்து காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, ஐஓசி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 73.80 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.84 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 141.36 புள்ளிகள் குறைந்து, 59,936.52 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.05 புள்ளிகள் குறைந்து, 17,829.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications