நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று சற்று சரிவில் தான் உள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், பொருளாதாரம் முன்னேற்றம் குறித்தான குறியீடுகள் சரிவில் காணப்படுவதையடுத்து, சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. அதோடு சந்தையானது புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்யலாம். இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 113.86 புள்ளிகள் குறைந்து, 51,821.02 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.90 புள்ளிகள் குறைந்து, 15,537.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 135.84 புள்ளிகள் குறைந்து, 51,799.04 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 33.60 புள்ளிகள் குறைந்து, 15,541.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1006 பங்குகள் ஏற்றத்திலும், 551 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்ஃப்ரா, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, ஐடிசி, விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், மாருதி சுசூகி, சன் பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சிஉள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, ஐடிசி, கோடக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 18 பைசா சரிந்து, 73.08 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.90 ரூபாயாக முடிவடைந்திருந்தது கவனிக்கதக்கது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 349.03 புள்ளிகள் குறைந்து, 51,585.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 79.60 புள்ளிகள் குறைந்து, 15,495.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications