2வது நாளாக தொடரும் சரிவு.. சென்செக்ஸ், நிஃப்டியின் நிலவரம் என்ன..!

இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து கடந்த வாரத்தில் இருந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது தொடர்ச்சியான 6வது அமர்வாக சரிவினைக் கண்டு வருகின்றது.

இது தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

கடந்த அமர்வில் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, கிட்டதட்ட 2000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், முடிவில் 1500 புள்ளிகளுக்கு மேலாக சரிந்து முடிவடைந்தது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

இது நடப்பு வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் தொடர்ந்து சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இது அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்வது, புராபிட் செய்வது, செல்லிங் செய்வது என பல காரணங்களுக்கு மத்தியில் தான் அன்னிய முதலீடுகள் விகிதமானது சரிவினைக் கண்டு வருகின்றது.

 முதலீடுகள் வரத்து?

முதலீடுகள் வரத்து?

என் எஸ் இ தரவுகளின் படி, ஜனவரி 24 அன்று தொடர்ச்சியாக இந்திய சந்தையில் இருந்து 5வது நாளாக முதலீடுகள் வெளியேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 3751.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 74.88 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 808.44 புள்ளிகள் குறைந்து, 56,683.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 232.10 புள்ளிகள் குறைந்து, 16,917 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 410 பங்குகள் ஏற்றத்திலும், 1810 பங்குகள் சரிவிலும், 57 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், மெட்டல்ஸ்,பிஎஸ்இ கன்சியூமன்ஸ் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் கார்ப், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி,ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதெ ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ்,ஹெச்டிஎஃப்சி வங்கி,ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

10.23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 307.53 புள்ளிகள் அல்லது 0.53% குறைந்து, 57,183.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.6 புள்ளிகள் அல்லது 0.43% குறைந்து, 17075.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+