முதல் நாளே முதலீட்டாளர்களை கதற விட்ட சந்தை.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் புனித வெள்ளி என்பதால் அமெரிக்க சந்தைகள் விடுமுறையாகும். வியாழக்கிழமையன்று சந்தை சரிவில் முடிவடைந்திருந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் தொடங்கியுள்ளன.

குறிப்பாக இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இந்திய சந்தைகளும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களும் விடுமுறையாகும். ஆக அதன் அழுத்தமும் இன்று சந்தையில் இருக்கலாம்.

சர்வதேச காரணிகள்

சர்வதேச காரணிகள்

மேலும் இது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பலவீனமான பொருளாதார வளர்ச்சி, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலை, பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிறுவனங்களின் முடிவுகள் என பலவும் இன்று சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

ஏப்ரல் 13 நிலவரப்படி, 2061.04 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 1410.85 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 984.45புள்ளிகள் அல்லது 1.69% குறைந்து, 57,354.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 325.40 புள்ளிகள் குறைந்து, 17,150.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 1129.62 புள்ளிகள் அல்லது 1.94% குறைந்து, 57,209.31 புள்ளிகளாகவும், நிஃப்டி 299.20 புள்ளிகள் குறைந்து, 17,176.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 950 பங்குகள் ஏற்றத்திலும், 1611 பங்குகள் சரிவிலும், 142 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. இதி பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 4% ஆகவும், நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள என்டிபிசி, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, டிவிஸ் லேப், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி, டாடா ஸ்டீல், எம் &எம், பவர் கிரிட் கார்ப், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ் , டெக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி , டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

9.56 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1065.85 புள்ளிகள் குறைந்து, 57,273.08 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 271.45 புள்ளிகள் குறைந்து, 17,204.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+