கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் இந்திய சந்தையானது., வார இறுதி வர்த்தக நாளான இன்று மீண்டும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் தொடக்கத்தில் 750 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
இது முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதால் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த அமர்வில், அமெரிக்க சந்தையானது சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தைகளும் இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றன.
கவனிக்க வேண்டிய காரணிகள்
சர்வதேச சந்தையில் உள்ள சில காரணிகளுக்கு மத்தியில், இன்று வார இறுதி வர்த்தக நாள், மாத இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் முதலீடுகள் அதிகளவில் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், இது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் ஒரு காரணம் என்றாலும் தொடர்ந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடுகள், சந்தைக்கு எதிரான சர்வதேச காரணிகள், புராபிட் புக்கிங் உள்ளிட்ட பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
எவ்வளவு வெளியேற்றம்?
நவம்பர் 25 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 2,300.65 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,367.80 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இது சந்தையில் ஏற்படும் அதிக சரிவினைக் தடுத்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 106.49 புள்ளிகள் குறைந்து, 58,688.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 208.80 புள்ளிகள் குறைந்து, 17,327.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 722.43 புள்ளிகள் குறைந்து, 58,072.66 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 223.90 புள்ளிகள் குறைந்து, 223.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் 724 பங்குகள் ஏற்றத்திலும், 1249 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாக சரிவிலும், மற்ற அனைத்து குறியீய்டுகளும் 1% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா, ஹிண்டால் கோ, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி சுசுகி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது என்ன நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 736.67 புள்ளிகள் குறைந்து, 58,058.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 222.50 புள்ளிகள் குறைந்து, 17,313.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
ஆசிய சந்தைகள் பலவும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் அழுத்தம் சந்தையில் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications