இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இது புராபிட் புக்கிங் செய்யப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக சந்தையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் சந்தையில் மேலும் அழுத்தத்தினை கொடுக்கும் விதமாக கொரோனாவின் தாக்கமானது, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் சரிவினை காண வழிவகுத்துள்ளது.
சர்வதேச சந்தைகள் வீழ்ச்சி
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்தது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. எனினும் டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் விரைவில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 149.51 புள்ளிகள் குறைந்து, 60,073.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 59.20 புள்ளிகள் குறைந்து, 17,866.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 487.21 புள்ளிகள் குறைந்து, 59,735.94 புள்ளிகளாகவும், நிஃப்டி 144.80 புள்ளிகள் குறைந்து, 17,780.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 793 பங்குகள் ஏற்றத்திலும், 1373 பங்குகள் சரிவிலும், 76 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி,நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, யுபிஎல், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, மாருதி சுசுகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, அதானி போர்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹெச்,டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல ஹெச்,டி.எஃப்.சி, ஹெச்,டி.எஃப்.சி வங்கி,டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ்,ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 808.85 புள்ளிகள் குறைந்து, 59,414.30 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 233.55 புள்ளிகள் குறைந்து, 17,691.70 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. வர்த்தகர்கள் கவனமுடன் டிரேடிங் செய்வது நல்லது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications