நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி காரணமாக இந்திய சந்தைககளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் என்னவாகுமோ என கவலையளித்துள்ளது. ஆக முதலீட்டாளர்கள் இதனையும் கவனித்து வருகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 87.95 புள்ளிகள் அதிகரித்து, 50,117.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.60 புள்ளிகள் அதிகரித்து, 14,876 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சந்தைகள் சரிவினைக் கண்டன. குறிப்பாக சென்செக்ஸ் 305.03 புள்ளிகள் குறைந்து, 49,724.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82 புள்ளிகள் குறைந்து, 14,785.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 688 பங்குகள் ஏற்றத்திலும், 719 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், பிரிட்டானியா, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இன்று ஐடி துறை பங்குகள நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றது. இது நான்காவது காலாண்டில் நல்ல அறிக்கையினை காட்டலாம் என முதலீட்டாளர்கள் ஐடி துறை பங்குகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 647.99 புள்ளிகள் குறைந்து, 49,381.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 171.20 புள்ளிகள் குறைந்து, 14,696.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications