புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டு சரிந்த சென்செக்ஸ்.. 17,000 அருகில் வர்த்தகமாகும் நிஃப்டி..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளன. எனினும் புதிய உச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் சரிவினை கண்டு வருகின்றது சென்செக்ஸ்.

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சந்தைகள், தொடர்ந்து புதிய உச்சத்தினை உடைத்து அனுதினமும் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் புதிய உச்சத்தினை எட்டிய நிலையில், இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் சற்று சரிவில் காணப்பட்டன.

சீனாவில் பரவும் கொரோனா

சீனாவில் பரவும் கொரோனா

குறிப்பாக சீனாவில் தற்போது டெல்டா கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், அது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய சந்தைகள் இன்று காலை தொடக்கத்தில் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில் மீண்டும் சரிவினைக் கண்டு வருகின்றது.

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

அதே போல அமெரிக்காவிலும் தொடர்ந்து அதிகரித்து உருமாறிய கொரோனா தாக்கமானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் ஊக்கத்தொகை மற்றும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவான நிலையிலேயே உள்ளன. இதனால் சந்தையில் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

எனினும் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 233.52 புள்ளிகள் அதிகரித்து, 57,127.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 60.80 புள்ளிகள் அதிகரித்து, 16,991.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 127.37 புள்ளிகள் அதிகரித்து, 57,017.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.20 புள்ளிகள் அதிகரித்து, 16970 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1298 பங்குகள் ஏற்றத்திலும், 521 பங்குகள் சரிவிலும், 87 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் சற்று சரிந்து காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் அனைத்து குறியீடுகளும் சற்றே ஏற்றம் கண்டு 1% கீழாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றன. ஆக வர்த்தக முடிவுக்குள் இன்னும் பல இன்டெக்ஸ்கள் சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஓ.என்.ஜி.சி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எம்&எம், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 73.24 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.27 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 88.82 புள்ளிகள் அதிகரித்து, 56,978.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 21.2 புள்ளிகள் அதிகரித்து, 16,952.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+