வாரத்தின் இறுதி நாளும் வீழ்ச்சி தான்.. சென்செக்ஸ் 49,000 கீழ் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், தொடர்ந்து வீழ்ச்சியினை கண்டு வருகின்றன.

தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பணவீக்கம் பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் எந்த மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்த போகிறதோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இதனால் இந்திய சந்தைகள் தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகின்றன.

 இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 155.20 புள்ளிகள் குறைந்து, 49,061.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.20 புள்ளிகள் குறைந்து, 14,503.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 244.16 புள்ளிகள் குறைந்து, 48,972.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 71.40 புள்ளிகள் குறைந்து, 14,486.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 352 பங்குகள் ஏற்றத்திலும், 1050 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, கெயில், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு


இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, லார்சன், பஜாஜ் பைனான்ஸ், எம் & எம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 408.19 புள்ளிகள் குறைந்து, 48,808.33 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 138.80 புள்ளிகள் குறைந்து, 14,419.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்பதாலும், சர்வதேச காரணிகளுக்கு மத்தியிலும் சந்தை சரிவில் காணப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+