கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சென்செக்ஸ்.. கிட்டதட்ட 200 புள்ளிகள் சரிவு..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. நேற்று சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டு சரிவானது தொடருகிறது.

இந்தியாவினை பொறுத்த வரையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. அனுதினமும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு புறம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதோடு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எப்படி இருப்பினும் கடந்த ஆண்டினை போல் அல்லாமல், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் உள்ளன. எப்படி இருப்பினும் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக இருக்கலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிய பங்கு சந்தைகள் சரிவு

ஆசிய பங்கு சந்தைகள் சரிவு

அமெரிக்காவில் மூலதன ஆதாய வரி இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரனமாக முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆசிய பங்கு சந்தைகளும் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 80.66 புள்ளிகள் அதிகரித்து, 48,161 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 47.20 புள்ளிகள் குறைந்து, 14,359 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 184.33 புள்ளிகள் குறைந்து, 47,896.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 66.80 புள்ளிகள் குறைந்து, 14,339.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 833 பங்குகள் ஏற்றத்திலும், 484 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி, சன் பார்மா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்யுஎல், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 202.88 புள்ளிகள் குறைந்து, 47,877.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 33.85 புள்ளிகள் குறைந்து, 14,372.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+