நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. கடந்த வாரத்திலேயே ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தைகள், பணவீக்கத்தினை அதிகரிக்குமே என்ற கவலைகள் எழுந்துள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் கொரோனா ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது இன்னும் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றம் காணலாம் என்றாலும், தற்போதைக்கு ஏற்ற இறக்கத்தில் தான் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 143.14 புள்ளிகள் குறைந்து, 50,648.94 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.80 புள்ளிகள் குறைந்து, 14,999.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1028 பங்குகள் ஏற்றத்திலும், 633 பங்குகள் சரிவிலும், 98 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், கெயில், ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஹெச் சி எல் டெக், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், கெயில், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 561.75 புள்ளிகள் குறைந்து, 50,230.33 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 160.50 புள்ளிகள் குறைந்து, 14,870.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications