புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. 58,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்.. !

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் வேலையில்லாதோர் நலன் குறித்த தரவானது, சந்தைக்கு சாதகமாக குறைந்ததையடுத்து, அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் வேலை குறித்த தரவானது சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது ஒரு மாத சரிவில் இருந்து மீண்டுள்ளது.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

இதனையடுத்து இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்திய சந்தைகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் புராபிட புக்கிங் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்கலாம்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 178.58 புள்ளிகள் அதிகரித்து, 58,031.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 0.10 புள்ளிகள் அதிகரித்து, 17,234.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 217.58 புள்ளிகள் அதிகரித்து, 58,070.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 61.80 புள்ளிகள் அதிகரித்து, 17,296 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,315 பங்குகள் ஏற்றத்திலும், இதே 346 பங்குகள் சரிவிலும், 98 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.ஜி,சி, பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. நிஃப்டி ஆட்டோ 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றம் கண்டுள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி லைஃப், டாடா கன்சியூமஸ் புராடக்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.யு.எல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஹெச்.சி.எல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 72.31 புள்ளிகள் அதிகரித்து, 57,924 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 21.25 புள்ளிகள் அதிகரித்து, 17,255.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 73.04 ரூபாயாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வில் 73.06 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+