மீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,200-க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

கடந்த ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதம் எதிர்பார்த்ததை போலவே 20.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது சந்தையானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது.

இதற்கிடையில் இனி முதலீடுகள் வரத்து, நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கலாம் என்ற யூகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

தொடர்ந்து புதிய உச்சம்

தொடர்ந்து புதிய உச்சம்

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று மீண்டும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன..
கொரோனாவினால் சரிவினைக் கண்ட பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே ஜிடிபி சுட்டிக் காட்டுகின்றது. இதனால் இனி வேலை வாய்ப்புகளும் பெருகி வரும். பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற கருத்துகளும் நிலவி வருகின்றன. இதனால் சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.

ஏற்றத்தில் அமெரிக்க சந்தைகள்

ஏற்றத்தில் அமெரிக்க சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவினைக் கண்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகின்றன. எனினும் இந்திய சந்தைகள் மேற்கண்ட பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில், புதிய உச்சத்தில் தொடங்கியுள்ளன. இனி வரும் நாட்களிலும் தடுப்பூசி போடப்படும் விகிதமும் சந்தையினை பொறுத்து, பொருளாதாரம் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 219.43 புள்ளிகள் அதிகரித்து, 57,771.82 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.60 புள்ளிகள் அதிகரித்து, 17,181.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 129.78 புள்ளிகள் அதிகரித்து, 57,682.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36.60 புள்ளிகள் அதிகரித்து, 17,168.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,250 பங்குகள் ஏற்றத்திலும், 439 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ கன்சியூமர், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், எம் & எம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, லார்சன், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், எம் & எம், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் சற்று குறைந்து 73.04 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 73 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்செக்ஸ் 117.98 புள்ளிகள் அதிகரித்து, 57,714.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.15 புள்ளிகள் அதிகரித்து, 17,169.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+