யுத்தத்தின் மத்தியிலும் 1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. ஏன்..?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதே கடந்த அமர்வில் மிக மோசமான அளவில் 2700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் வீழ்ச்சி கண்டது.

இதற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கம் முக்கிய காரணமாக இருந்த நிலையில், நேற்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருந்தது. இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் மிக அதிகமாகவே இருந்தது. இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

வாங்கியிருக்கலாம்

வாங்கியிருக்கலாம்

இந்திய பங்கு சந்தையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், அதளபாதாளத்தில் இருந்தது. இதனால் நல்ல நிறுவனங்களின் பங்கு விலைகள் கூட மிக மலிவாக கிடைத்தன. கூடுதலாக எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த காண்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்வது, இன்று புதியதாக பங்குகளை வாங்குவது அதிகரித்துள்ளது. இதுவும் சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

 உக்ரைனுக்கு வலுக்கும் சிக்கல்

உக்ரைனுக்கு வலுக்கும் சிக்கல்

அண்டை நாடுகள் ரஷ்யாவிடம் என்னதான் பேச்சு வார்த்தை நடத்தினாலும், எச்சரிக்கை விடுத்தாலும், அதற்கெல்லாம் ரஷ்யா செவி சாய்ப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் முதல் நாளை விட இரண்டாம் நாளில் இன்னும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏனெனில் உக்ரைனின் தலை நகர் கீவ் அருகே பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகள் எதிர்த்து போராடினாலும், ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆக ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகின்றது.

திட்டமிட்டு தாக்குதல்

திட்டமிட்டு தாக்குதல்

ரஷ்யாவின் இந்த கடும் தாக்குதலால் பல பேர் இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலரும் உயிர் பிழைத்தால் போதும் என, ரஷ்யா படைகளுக்கு பயந்து வெளியேறியும் வருகின்றனர். உயிருக்கு பயந்து போராடி வரும் மக்கள் ஒருபுறம், குறிபார்த்து உக்ரைனின் ராணுவ தளங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் என உக்ரைனை முடக்கும் விதமாக ரஷ்யா திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றது.

பொருளாதாரம் என்னவாகும்?

பொருளாதாரம் என்னவாகும்?

உக்ரைன் மக்கள் உயிருக்கு பயந்து கவலை கொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டின் பொருளாதாரம் என்னவாகுமோ என்று நினைத்துக் கூட பார்க்க இப்போது நேரமில்லை. அந்தளவுக்கு பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. ஆக பங்கு சந்தையானது தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 24 நிலவரப் படி, 6,4448.24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 7667.75 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தைகளும் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியிலும், இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் 1% மேலாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளன. இதனையடுத்து ஒரு ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலி இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 267.73 புள்ளிகள் அதிகரித்து, 54,797.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 155.80 புள்ளிகள் அதிகரித்து, 16,403.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 963.28 புள்ளிகள் அதிகரித்து, 55,493.19 புள்ளிகளாகவும், நிஃப்டி 289.80 புள்ளிகள் அதிகரித்து, 16,537.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதில் 1544 பங்குகள் ஏற்றத்திலும், 611 பங்குகள் சரிவிலும், 68 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாக ஏற்றத்தில் உள்ளன. பேங்க் நிஃப்டி, 50, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்டவை 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்றவை 2% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டாஸ், அதானி போர்ட்ஸ், இந்தஸ் இந்த் வங்கி, டாடா ஸ்டீல், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், பிரிட்டானியா, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், நெஸ்டில் டாப் லூசராகவும் உள்ளது.

 தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

10.06 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1224.72 புள்ளிகள் அதிகரித்து, 55,745.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி372.6 புள்ளிகள் அதிகரித்து, 16,620.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+