முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதல்.. 600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. ஏன்..!

கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட இந்திய சந்தைகள், இன்று காலை தொடக்கத்திலேயே சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

 முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சம், வட்டி விகித மாற்றம், பணவீக்கம், லாக்டவுன் கட்டுபாடுகள் குறித்த அச்சம், பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் என பல்வேறு காரணிகளும் கவனிக்க வேண்டிய முக்கிய அமசங்களாக உள்ளன.
ஆக வரவிருக்கும் அமர்வுகளில் இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ மெட்டல்ஸ் பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஐடி பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 3% வரையில் ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிண்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச் சி எல் டெக், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், விப்ரோ, ஹிண்டால்கோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே சிப்லா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

 சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச் சி எல் டெக், டாடா ஸ்டீல், விப்ரோ, சன் பார்மா, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (10.14 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 689.63 புள்ளிகள் அதிகரித்து, 56,485.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 195.90 புள்ளிகள் அதிகரித்து, 16,810.10 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
மேப் மை இந்தியா பங்கானது இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், கவனிக்க வேண்டிய பங்காக உள்ளது. இது 53% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+