தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் இந்திய சந்தைகள்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன.

இது மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது. இது சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து லாபத்தினை கொடுத்து வருகின்றது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த அமர்வில், அமெரிக்க சந்தையானது சற்று சரிவில் முடிவடைந்தது. இதன் காரணமாக இன்று ஆசிய சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன. எனினும் இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சர்வதேச சந்தையில் உள்ள சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தை இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என்பது மிக அதிகமாகவே உள்ளது. இது இன்னும் கடுமையானால் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது.எனினும் சாதகமான தொழில் துறை உற்பத்தி குறித்தான குறியீடு, என சந்தைக்கு சாதகமான சில விஷயங்களும் வந்து கொண்டுள்ளன. இதனால் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 281.23 புள்ளிகள் அதிகரித்து, 59,422.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 79.70 புள்ளிகள் அதிகரித்து, 17,709.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இது இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இது இம்மாத இறுதிக்குள் 60,000 புள்ளிகளை தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால் கோ, ஓ.என்.ஜி.சி., யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, இந்தஸிந்த், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது என்ன நிலவரம்

தற்போது என்ன நிலவரம்

சந்தையில் பஜாஜ் பின்செர்வ் டாப் கெயிர்னர்களில் ஒன்றாக காணப்படுகின்றன. அதே போல நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பங்கு விலையானது அதன் 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 451.58 புள்ளிகள் அதிகரித்து, 59,592.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 118.85 புள்ளிகள் அதிகரித்து, 17,748.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

முடிவு நிலவரம்

முடிவு நிலவரம்

இன்று காலை வரலாற்று உச்சத்தில் தொடங்கிய சந்தையானது முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 125.27 புள்ளிகள் குறைந்து, 59,015.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 44.35 புள்ளிகள் குறைந்து, 17,585.15 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+