அதிருப்தியில் முதலீட்டாளர்கள்.. தொடர்ந்து சரிவை காணும் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும், தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவினைக் கண்டு முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் அனைத்தும் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டன.

இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. அதிலும் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, சந்தையானது பலத்த சரிவில் காணப்படுகின்றது.

 முதலீடுகள் வரத்து?

முதலீடுகள் வரத்து?

என் எஸ் இ தரவுகளின் படி, ஜனவரி 20 அன்று தொடர்ச்சியான 4வது அமர்வாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 4,679.84 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 769.26 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று குறைந்து காணப்பட்டது. குறிப்பாக 170.65 புள்ளிகள் குறைந்து, 59,293.97 புள்ளிகளாகவும், நிஃப்டி 129.60 புள்ளிகள் குறைந்து, 17,627.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 546.36 புள்ளிகள் குறைந்து, 58,900.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 160.30 புள்ளிகள் குறைந்து, 17,596.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 806 பங்குகள் ஏற்றத்திலும், 1289 பங்குகள் சரிவிலும், 89 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.யு.எல், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பின்செர்வ், டெக் மகேந்திரா, கோல் இந்தியா, டிவிஸ் லேப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.யு.எல், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல பஜாஜ் பின்செர்வ், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது 10.25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 540.22 புள்ளிகள் குறைந்து,58,924.40 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 159.4 புள்ளிகள் குறைந்து, 17,597.60 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து சரிவினை கண்டு வரும் நிலையில் 59,000 புள்ளிகளுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+