தொடரும் போராட்டம்.. ஏற்ற இறக்கத்தில் சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ரிலையன்ஸ், வங்கி பங்குகள்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தைகள், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளன.

இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் சரிவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வேதேச சந்தைகள் சரிவு

சர்வேதேச சந்தைகள் சரிவு

கடந்த அமர்வில் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் சில குறியீடுகள் சரிவில் காணப்பட்டன. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது தொடர்ந்து வெளியேறி வருகின்றது. நவம்பர் 24 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 5,122.65 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3,809.62 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தையில் ஏற்படும் அதிக சரிவினை தடுத்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 66.47 புள்ளிகள் அதிகரித்து, 58,407.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 88.70 புள்ளிகள் அதிகரித்து, 17,503.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 94.53 புள்ளிகள் குறைந்து, 58,246.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.50 புள்ளிகள் குறைந்து, 17,396.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,216 பங்குகள் அதிகரித்தும், 516 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி ஐடி, பி.எஸ்.இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பி.எஸ்.இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.ஓ.சி, என்.டி.பி.சி, கோல் இந்தியா, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு


இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, என்.டி.பி.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு,எல், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது (9.47 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 34.18 புள்ளிகள் குறைந்து, 58,306.81 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 12.20 புள்ளிகள் குறைந்து, 17,402 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்று ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+