வார இறுதி வர்த்தக நாளில் மிகப்பெரிய ரிலீப்.. ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சில அமர்வுகளுக்கு பிறகு ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கின. ஆக இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் பல அமர்வுகளுக்கு பிறகு இன்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வார இறுதி வர்த்தக நாளான இன்று ஏற்றம் கண்டிருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

எனினும் வார இறுதி வர்த்தக நாளாக இன்று மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும், இன்ட்ராடே வர்த்தகர்களும் புராபிட் புக்கிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்தையில் இன்றும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

நவம்பர் 11 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் 1,637.46 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதுவே உள்நாட்டு முதலீட்டாளர்களும் இந்த சமயத்தில் 445.76 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர். இது சந்தையில் ஏற்பட்ட்டுள்ள அதிக சரிவினைத் தடுத்து, சந்தைக்கு சாதகமாக உள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 420.20 புள்ளிகள் அதிகரித்து, 60,339.89 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.70 புள்ளிகள் அதிகரித்து, 17,956.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 309.35 புள்ளிகள் அதிகரித்து, 60,229.04 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 96.70 புள்ளிகள் அதிகரித்து, 17,970.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,376 பங்குகள் ஏற்றத்திலும், 393 பங்குகள் சரிவிலும், 63 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக இந்த அனைத்து குறியீடுகளும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாக பெரும்பாலான குறியீடுகள் சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி லைஃப், டெக் மகேந்திரா, ஹிண்டால்கோ, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, என்.டி.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 279.76 புள்ளிகள் அதிகரித்து, 60,199.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 92.30 புள்ளிகள் அதிகரித்து, 17,965.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கலாம். இன்று மெட்டல்ஸ் மற்றும் ஐடி பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+