நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. இது தொடர்ந்து பெரியளவில் ஏற்றம் காணாமல் சரிந்து வருவது, குறைந்த புள்ளிகளில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்திலும் தொடர்ந்து சரிவினைக் கண்ட நிலையில், வரவிருக்கும் நாட்களில் சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக வரவிருக்கும் நாட்களில் சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தைகள் சரிவு
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன. இதனையடுத்து இந்திய சந்தைகளும் மாற்றமின்றி, சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் தூண்டுதல் தொகுப்பு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவினைக் கண்டது.
இதுவும் ஒரு காரணம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது மீண்டும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 156.40 புள்ளிகள் அதிகரித்து, 59,455.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 55.40 புள்ளிகள் அதிகரித்து, 17,746.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 72.08 புள்ளிகள் குறைந்து, 59,227.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23 புள்ளிகள் குறைந்து, 17,668.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,223 பங்குகள் ஏற்றத்திலும், 642 பங்குகள் சரிவிலும், 110 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்ல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிந்து காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, ஐஓசி, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 108.67 புள்ளிகள் குறைந்து, 59,190.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 24.15 புள்ளிகள் குறைந்து, 17,667.10 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
பணவீக்கம், திவால் நிலைக்கு மத்தியில் சந்தையானது மேற்கொண்டு சரிவினைக் கண்டாலும், குறைந்த புள்ளிகளில் வாங்கலாம். மேலும் பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications