நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் தான் தொடங்கின. ஆக இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் இன்று சரிவில் தான் காணப்படுகின்றது.
தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில அமர்வுகளாகவே அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், வார இறுதி வர்த்தக நாளாக இன்று மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும், இன்ட்ராடே வர்த்தகர்களும் புராபிட் புக்கிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்தையில் இன்றும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த அமர்வில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் 3,818.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதுவே உள்நாட்டு முதலீட்டாளர்களும் இந்த சமயத்தில் 836.60 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இதுவும் சந்தையை சற்று தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற நிலையில், தற்போது சரிவினைக் கண்டுள்ளது.
கொரோனா தாக்கம்
சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து, இது மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் இருந்து வருகின்றது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டும் இருந்து வந்தது. இதுவும் உற்பத்தியில் தாக்கதினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 55.57 புள்ளிகள் அதிகரித்து, 60,040.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 64.90 புள்ளிகள் அதிகரித்து, 17,792.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 456.06 புள்ளிகள் குறைந்து, 59,519.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132 புள்ளிகள் குறைந்து, 17,725.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 677 பங்குகள் ஏற்றத்திலும், 1,051 பங்குகள் சரிவிலும், 82 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ ஆயில் & கேஷ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எஸ்பிஐ, எம் & எம், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், என்.டி.பி.சி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது என்ன நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 24.70 புள்ளிகள் அதிகரித்து, 60,009 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 24.52 புள்ளிகள் அதிகரித்து, 17,869.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் இன்றும் அடுத்த சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கலாம்.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications