புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக சென்செக்ஸ் 58,800 புள்ளிகளுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வருகின்றன. உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா பரவல் அச்சமும் சந்தையில் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சந்தைக்கு சாதமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இது சந்தைக்கு சாதகமான தொழிற்துறை குறித்தான குறியீடுகள், எண்னெய் விலை அதிகரிப்பு, அமெரிக்காவில் கார்ப்பரேட் வரி அதிகரிப்பு குறித்தான சாதகமான கருத்துகள் என பலவும் சந்தையில் எதிரொலித்துள்ளது. இது சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. ஒரு புறம் கொரோனா பரவல் என்பது இருந்தாலும், பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் இன்று காலை தொடக்கத்தில் ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் புதிய உச்சத்தில் தொடங்கியது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக இன்று டெலிகாம் சந்தையில் 4 வருட கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையலாம் என்ற நிலையில், அவற்றின் பங்குகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 80.46 புள்ளிகள் அதிகரித்து, 58,803.66 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 27.80 புள்ளிகள் அதிகரித்து, 17,547.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி உள்ளிட்ட சில குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி குறியீடானது 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஐடிசி, டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிபிசிஎல், கோல் இந்தியா, என்.டி.பி.சி, டெக் மகேந்திரா. டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, ஹெச்.யு.எல். உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே என்.டி.பி.சி, டெக் மகேந்திரா. பஜாஜ் பின்செர்வ், இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.44 - 73.54 ரூபாய்க்குள் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 114.94 புள்ளிகள் அதிகரித்து, 58,838.14 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.80 புள்ளிகள் அதிகரித்து, 17,552.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+