பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின், வருடத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இது பெரியளவில் ஏற்றம் இல்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் தொடக்கத்தில் சற்று சரிவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள், ஓமிக்ரான் தாக்கம் என பலவும் சந்தைக்கு எதிரான விஷயமாக இருந்து வருகின்றது. இது சந்தை சரிவுக்கு வழிவகுக்கலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகள் ஏற்றம்

சர்வதேச சந்தைகள் ஏற்றம்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகளில் சில குறியீடுகள் ஏற்றத்தில் காணப்பட்டாலும், சில முக்கிய குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் தான் காணப்பட்டன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்ற இறக்கத்தில் தான் தொடங்கியுள்ளது.

முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஜனவரி 4 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1,273.86 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 532.97கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?


இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 51.92 புள்ளிகள் அதிகரித்து, 59,907.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 1.50 புள்ளிகள் குறைந்து, 17,803.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ்24.28 புள்ளிகள் குறைந்து, 59,831.65 புள்ளிகளாகவும், நிஃப்டி 7 புள்ளிகள் குறைந்து, 17,798.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1374 பங்குகள் ஏற்றத்திலும், 843 பங்குகள் சரிவிலும், 96 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், ஐஓசி, பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், அல்ட்ரடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச். டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ், என்.டி.பி.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.40 நிலவரப்படி) சென்செக்ஸ் 155.75 புள்ளிகள் குறைந்து, 59,700.18 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 42.3 புள்ளிகள் குறைந்து, 17,762.95 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று ஐடி துறை, ரியால்டி, பார்மா துறை பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+