இன்று லாபமா நஷ்டமா..தடுமாறும் இந்திய பங்கு சந்தைகள்.. சென்செக்ஸ் 58,300-க்கு கீழ் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

 

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றன.

இதற்கிடையில் பல காரணிகளும் சந்தைக்கு எதிராகவே காணப்படும் நிலையில், சந்தையானது சரிவினை காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதோடு சந்தையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையானது இன்னும் சற்று அழுத்தத்தில் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இன்று தொடக்கத்தில் சற்று ஏற்ற இறக்கத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 9.12 புள்ளிகள் அதிகரித்து, 58,288.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.10 புள்ளிகள் குறைந்து, 17,349 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகல் சரிவில் காணப்படுகின்றன. நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
 

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி, பிபிசிஎல், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே என்.டி.பி.சி, ஈச்சர் மோட்டார்ஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில், 32 பைசா குறைந்து, 73.42 ரூபாயாக சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்றும் சற்று சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 4.59 புள்ளிகள் குறைந்து, 58,274.89 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி மாற்றமின்றி 17,362.10 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: Sensex, nifty open flat amid weak global weak

Sensex, nifty trade flat amid weak global cues, sensex trade below 58,300
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X