560 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. தொடக்கமே அசத்தல் தான்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் இந்திய சந்தைகள் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று தொடக்கத்திலேயே அசத்தல் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

இதற்கிடையில் பல காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பானது 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியுள்ளது. அதோடு அன்னிய முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளார்களின் முதலீடும் நேற்று வெளியேற தொடங்கியுள்ளது. இதுவும் சந்தைக்கு சரிவுக்கு காரணமாக அமைந்தது.

ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை

ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு ஏற்றம் காண தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலி இந்திய சந்தைகளிலும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 371.13 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 59,560.86 புள்ளிகளாகவும், நிஃப்டி 109.60 புள்ளிகள் அதிகரித்து, 17,755.60 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டு காணப்பட்டது. இதனையடுத்து சென்செக்ஸ் 462.65 புள்ளிகள் அதிகரித்து, 59,652.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.90 புள்ளிகள் அதிகரித்து, 17,778.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1494 பங்குகள் ஏற்றத்திலும், 252 பங்குகள் சரிவிலும், 63 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கிட்டதட்ட 4% ஏற்றத்திலும், நிஃப்டி ஆட்டோ 3% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. நிஃப்டி ஐடி., பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி, எம்&எம், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, யுபிஎல், டிவிஸ் லேப், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி, எம்&எம், பஜாஜ் ஆட்டோ, ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே என்.டி.பி.சி பங்கு விலையானது சரிந்து டாப் லூசரராகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 581.03 புள்ளிகள் அதிகரித்து, 59,747.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 163.25 புள்ளிகள் அதிகரித்து, 17,809.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியானது வரவிருக்கும் அமர்விலும் வட்டி விகிதத்தினை மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+