இதென்ன குழப்பம்.. சென்செக்ஸ் சரிவு.. நிஃப்டி ஏற்றம்.. ஏன்..!

இந்திய பங்கு சந்தையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இன்று தொடக்கத்திலும் கூட சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

ஆனால் அந்த ஏற்றம் அப்படியே நிலைக்கவில்லை எனலாம். தற்போது சென்செக்ஸ் சரிவிலும், நிஃப்டி ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

இன்று வார இறுதி வர்த்தக நாள் என்ற நிலையில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ளது எனலாம்.

சர்வதேச சந்தைகள் தொடக்கம்

சர்வதேச சந்தைகள் தொடக்கம்

பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் இன்று தொடக்கத்திலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் வலுவான ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது.

முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறியே வந்தாலும், முந்தைய அமர்வுகளை காட்டிலும் சற்றே இது குறைந்துள்ளது எனலாம். ஆக இதுவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. டிசம்பர் 23 நிலவரப்படி, அன்னிய முதலீடுகள் வரத்து, 271.59 கோடி ரூபாயாக வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 1,196.48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆகவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.

வேலையின்மை நலன்

வேலையின்மை நலன்

அமெரிக்காவில் முக்கிய டேட்டாவாக பார்க்கப்பட்டு வரும் வேலையின்மை நலன் குறித்தான தரவானது சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. இது பொருளாதாரம் வலுவான பாதையில் திரும்பிக் கொண்டுள்ளது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் வலுவான ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 428.72 புள்ளிகள் அதிகரித்து, 57,744 புள்ளிகளாகவும், நிஃப்டி 57.60 புள்ளிகள் அதிகரித்து, 17,130.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 69.96 புள்ளிகள் அதிகரித்து, 57,385.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 13.20 புள்ளிகள் அதிகரித்து, 17,085.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1396 பங்குகள் ஏற்றத்திலும், 517 பங்குகள் சரிவிலும், 80 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீடுகள் ஏற்றத்தில் காணப்பட்டாலும், அதில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன. இதி நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் மட்டுமே மாற்றமின்றி காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, அதானி போர்ட்ஸ், என்டிபிசி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, ஐடிசி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.55 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 255.35 புள்ளிகள் குறைந்து, 57,059.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 85.1 புள்ளிகள் குறைந்து, 16,987.50 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. முன்னதாக சென்செக்ஸ் சரிவிலும், நிஃப்டி ஏற்றத்திலும் காணப்பட்டது. இன்று வார இறுதி என்பதால் புராபிட் புக்கிங் காரணமாக சரிவில் காணப்படுகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+