இன்றோடு கடந்த மூன்று அமர்வுகளாக சந்தையில் ஏற்றம் கண்டு வருகின்றது.பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி 17,000 புள்ளிகளுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
முதலீடுகள் வரத்து
எனினும் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறியே வருகின்றது. எப்படியிருப்பினும் கடந்த சில அமர்வுகளுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.அதே சமயம் உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக சரிவு தடுக்கப்பட்டுள்ளது. சந்தை ஏற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது எனலாம்.
ஜிடிபி கணிப்புகள்
பல்வேறு நாடுகளில் ஒமிக்ரானின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், பல நாடுகளின் பொருளாதாரமும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜிடிபி கணிப்புகள் சாதகமாக வந்த வண்ணம் உள்ளன. இதுவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் பரவல் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 442.37 புள்ளிகள் அதிகரித்து, 57,372.93 புள்ளிகளாகவும், நிஃப்டி 84.30 புள்ளிகள் அதிகரித்து, 17,039.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 296.89 புள்ளிகள் அதிகரித்து, 57,227.45 புள்ளிகளாகவும், நிஃப்டி 87.40 புள்ளிகள் அதிகரித்து, 17,042.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1508 பங்குகள் ஏற்றத்திலும், 271 பங்குகள் சரிவிலும், 50 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகிண்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஐஓசி, பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், யுபிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, என்.டி.பி.சி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது (9.56 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 475.95 புள்ளிகள் அதிகரித்து, 57,406.51 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 140.35 புள்ளிகள் அதிகரித்து, 17,095.80 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இன்று மெட் பிளஸ் ஹெல்த்கேர் சர்வீசஸ் கவனிக்க வேண்டிய பங்காக உள்ளது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications