2வது நாளாக ஏற்றத்தில் சந்தை.. பெரும் நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள்.. ஏன்..!

முந்தைய சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த இந்திய சந்தைகள், கடந்த இரண்டு அமர்வுகளாக சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், ஈமுடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகிறது.

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறி வந்தாலும், இந்திய சந்தையில் உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அதிக சரிவு தடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

எனினும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் பரவல், வட்டி விகித மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு, பணவீக்கம், லாக்டவுன் கட்டுப்பாடுகள், அன்னிய முதலீடுகள் வரத்து, ரூபாயின் மதிப்பு என பல காரணிகளும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும் முந்தைய சில வாரங்களாகவே சந்தையானது ஏற்றத்தில் இருந்த நிலையில், புராபிட் புக்கிங் செய்திருக்கலாம் என்ற கருத்தும் சந்தையில் நிலவி வருகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகிண்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், இந்தஸ் இந்த் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, யுபிஎல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயின்ட்ஸ், ஐஓசி, விப்ரோ, சிப்லா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, விப்ரோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.41 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 415.66 புள்ளிகள் அதிகரித்து, 56,734.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 125.90 புள்ளிகள் அதிகரித்து, 16,896.75 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

இன்று மெட்ரோ பிராண்ட்ஸ், ஜீ உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்காக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+