நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் சரிவில் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனாவின் தாக்கம் கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணங்கள்
எனினும் முந்தைய அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவு, டாலர் மதிப்பு சரிவு, என பலவும் சந்தைக்கு எதிராக காணப்படுகிறது. அதோடு பணவீக்கம், கிரிப்டோகரன்சி சரிவுகள், ஆசிய சந்தைகள் சரிவு என பல காரணகள் மற்றும் புராபிட் புக்கிங் என பல காரணிகள் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 45.61 புள்ளிகள் குறைந்து, 50,147.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.90 புள்ளிகள் குறைந்து, 15,089.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 113.20 புள்ளிகள் குறைந்து, 50,083.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.90 புள்ளிகள் குறைந்து, 15,075.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,161 பங்குகள் ஏற்றத்திலும், 540 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், கிரசிம், எஸ்பிஐ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், எம்&எம், ஓ என் ஜி சி, கோடக் மகேந்திரா, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப் லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திரா, ஹெச்யுஎல், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 23.74 புள்ளிகள் அதிகரித்து, 50,217.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.65 புள்ளிகள் அதிகரித்து, 15,119.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இன்று காலை தொடக்கத்தில் இருந்தே அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் சந்தையானது அவ்வப்போது ஏற்றத்திலும், சரிவிலும் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த நிலை இன்று தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications