வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
அமெரிக்காவின் ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டியின் முக்கிய முடிவுகள் பற்றி, மற்ற மத்திய வங்கிகளும் காத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 211.59 புள்ளிகள் அதிகரித்து, 58,998.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 90.50 புள்ளிகள அதிகரித்து, 17,601.80 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இதனையடுத்து சென்செக்ஸ் 354.67 புள்ளிகள் அதிகரித்து, 59,141.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107 புள்ளிகள் குறைந்து, 17,618.30 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இதனையடுத்து 1196 பங்குகள் ஏற்றத்திலும், 277 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.20 மணி நிலரப்படி, சென்செக்ஸ் 214.31 புள்ளிகள் அதிகரித்து, 59,000.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.85 புள்ளிகள் அதிகரித்து, 17,581.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications