வார இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்றே சரிவில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்று ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவில் காணப்படுகின்றன.
எனினும் அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்து வெளியான தரவானது, 52 வருடத்திற்கு மேலான குறைந்தபட்ச லெவலில் காணப்பட்டது. இது தொடர்ந்து சந்தையில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும் நிலையினை சுட்டிக் காட்டியுள்ளது. இது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
டிசம்பர் 9 நிலவரப்படி, தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் 1585.55 கோடி ரூபாயாக வெளியேறியுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 782.84 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சந்தையில் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 27.90 புள்ளிகள் குறைந்து, 58,779.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 148.50 புள்ளிகள குறைந்து, 17,368.30 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இதனையடுத்து சென்செக்ஸ் 148.50 புள்ளிகள் குறைந்து, 58,658.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.90 புள்ளிகள் குறைந்து,17,478.90 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இதனையடுத்து 1139 பங்குகள் ஏற்றத்திலும், 677 பங்குகள் சரிவிலும், 76 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக், உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், எம் & எம், சன் பார்மா, கிரசிம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், எம் & எம், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
9.52 மணி நிலரப்படி, சென்செக்ஸ் 104.77 புள்ளிகள் குறைந்து, 58,702.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.2 புள்ளிகள் குறைந்து, 17,494.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
ஏசியன் பெயின்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications