நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றது.
இது கடந்த அமர்வில் ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
கடந்த அமர்வில் அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் கண்ட நிலையில், அமெரிக்க பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் தொடங்கின. எனினும் இன்றும் சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
முதலீடுகள் வரத்து
தொடர்ந்து சந்தையில் உள்நாட்டு முதலீடுகள் என்பது அதிகரித்து வந்தாலும், சமீபத்திய நாட்களாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தன. எனினும் கடந்த அமர்வில் அன்னிய முதலீட்டாளர்கள் 424.74 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,524.67 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 184.70 புள்ளிகள் அதிகரித்து, 60,903.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 158.60 புள்ளிகள் அதிகரித்து, 17,950.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
எனினும் தொடக்கத்தில் சற்று சரிவில் காணப்பட்டன. சென்செக்ஸ் 122.97 புள்ளிகள் குறைந்து, 60,595.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.80 புள்ளிகள் குறைந்து, 18,074.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,104 பங்குகள் ஏற்றத்திலும், 763 பங்குகள் சரிவிலும், 96 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா வங்கி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எம் & எம், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 114.73 புள்ளிகள் குறைந்து, 60,603.98 புள்ளிகளாகவும், நிஃப்டி 24.80 புள்ளிகள் குறைந்து, 18,084.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆட்டோ மொபைல் துறை பங்குகள், ஐடி துறை பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
opening bell: sensex, nifty struggling amid profit booking/ லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.
More From GoodReturns

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications