ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய மெட்டல், ஐடி பங்குகள்..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த சில தினங்களாகவே ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இது புராபிட் புக்கிங் செய்யும் விதமாக காணப்படுகின்றது.

மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததுள்ளது. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே தொடங்கியது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் சரிவில் தொடங்கி பின்னர் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் மீண்டும் தற்போது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?


இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 289.80 புள்ளிகள் அதிகரித்து, 61,439.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 22.40 புள்ளிகள் அதிகரித்து, 18,234.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

எனினும் தொடக்கத்தில் சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 15.65 புள்ளிகள் குறைந்து, 61,134.41 புள்ளிகளாகவும், நிஃப்டி 7.30 புள்ளிகள் குறைந்து, 18,205 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1413 பங்குகள் ஏற்றத்திலும், 756 பங்குகள் சரிவிலும், 112 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் அனைத்தும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், கோல் இந்தியா, சன் பார்மா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் சி எல் டெக், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், சன் பார்மா, பவர் கிரிட், என்டிபிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல விப்ரோ, ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் சி எல் டெக், ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது 10.35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 99.37 புள்ளிகள் குறைந்து, 61,050.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.45 புள்ளிகள் குறைந்து, 18,192.90 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து 61,000 புள்ளிகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த சந்தையானது, தற்போது மீண்டும் சரிவினைக் கண்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+