இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. இந்த கூட்டத்தில் முக்கியமாக ரெப்போ விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இதற்கிடையில் தான் சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், தற்போது பெரியளவில் மாற்றமின்றி தான் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தைகள் நிலவரம்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் சில குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தாலும், தொடர்ந்து உள்நாட்டு முதலீடுகள் மதிப்பானது அதிகரித்து வருகின்றது. இது சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினை குறைத்துள்ளது. இது சரிவினைத் தடுத்துள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
பிப்ரவரி 9 நிலவரப்படி,என்.எஸ்.இ தரவுகள் 892.64 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1793.3 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. ஆக இது சந்தை பெரியளவில் ஏற்பட்டுள்ள சரிவினை தடுத்துள்ளது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 273.25 புள்ளிகள் அதிகரித்து, 58,739.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 158.70 புள்ளிகள் அதிகரித்து, 17,622.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 201.82 புள்ளிகள் அதிகரித்து, 58,667.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 61.90 புள்ளிகள் அதிகரித்து, 17,525.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1274 பங்குகள் ஏற்றத்திலும்,678 பங்குகள் சரிவிலும், 98 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், டெக், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த் கேர் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் இருந்தாலும், பெரியளவிலான ஏற்றத்தில் இல்லை.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட் கார்ப், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், பிபிசிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.டிஎஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், என்.டி.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
9.55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் முன்னதாக சற்று ஏற்றம் கண்ட நிலையில், தற்போது சென்செக்ஸ் 15.16 புள்ளிகள் குறைந்து, 58,450.81 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று அதிகரித்து, 17,465.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications